Grand Novena Feast of St. Jude is celebrated for 10 days each year from October 19th to October 28th with World´s Biggest 1001 wicks Oil Lamp lighted.

Prayer

அப்போஸ்தலரும் வேத சாட்சியுமான புனித யூதா ததேயுசே நீர் நமது ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய உறவினருள் ஒருவராய் இருக்கின்றீர்.புண்ணியத்திலும் புனித வரங்கனிலும் மகா கீர்த்தி பெற்றவர் உம்மை மன்றாடுகிறவர்களுக்குத் தவறாமல் மனுப் பேசுகின்றீர். திக்கற்று தயங்குவோருக்குவிசேஷ பாதுகாவல் நீர் நம்பிக்கை இழந்தவர்களின் நம்பிக்கை நீர். இந்த உமது வல்லபத்தில் நம்பிக்கை வைத்து இதோ நான் உம்மை நாடி வருகிறேன். எனக்கு மிக்வும் அவசரமான இந்த வேளையில் உதவி புரியும்படி உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன். (நம் தேவைகளைக் கேட்போம்) ஓ தயாள இருதய ததேயுசே இனிமேல் உள்ள எனது வாழ்நாட்களில் உம்மை எனது சிறப்பு பாதுகாவலராக வணங்குவேன் என்றும் எங்கள் அவசரங்களில் உதவி செய்ய நீர் வல்லமை வாய்ந்தவரும், தீவிரமாய் பரிந்து பேசுகிறவருமாயிருக்கின்றீர் என்று உமது பக்தியை மக்களிடையில் பரவக் செய்வேன் என்னும் உறுதியாக வாக்களிக்கின்றேன், புனித யூதா ததேயுசே, எங்களுக்காகவும் உமது உதவியை மன்றுடும் அனைவருக்காகவும் வேண்டிக்கொன்ளும். ஆமென்.

Copyright St. Jude Shrine Koothattukulam. All right reserved.